ஜூன் 17- பொதுஉடைமை போராளியின் நினைவை போற்றுவோம்..


பொதுத்துறை எல். . சி யை பாதுகாப்போம்..

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956 ஆம் ஆண்டுக்கு முன்
248 கம்பனிகளாக தனியார்களின் கையில் இருந்த இன்சூரன்ஸ் துறை இந்திய உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்த சூழ்நிலையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்கிற தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தனியார் இன்சூரன்ஸ் கம்பனிகள் செய்து வந்த கொள்ளைகளை எதிர்த்து குரல்கொடுத்து இன்சூரன்ஸ் துறையை
தேச உடைமையாக்க வேண்டும் போராடி வெற்றிகண்ட மறைந்த
தோழர். சரோஜ் அவர்களின் நினைவை போற்றுவோம்..
இவர்கள் போன்ற தலைவர்களெல்லாம் பல தியாகங்கள் செய்து போராடி உருவாக்கிய பொதுத்துறை எல். ஐ. சி யை - இன்சூரன்ஸ் துறையை அந்நிய சக்திகள் - ஏகாதிபத்திய முதலாளிகள்சூறையாடி கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசானது சட்டபூர்வமாக அனுமதியளிக்க வேகமாக முயற்சி செய்து வருவது
கண்டிக்க வேண்டிய செயலாகும்.
இப்படிப்பட்ட தோழர்கள் தோற்றுவித்த தொழிற்சங்கத்தில் நானுமொரு உறுப்பினராய் இயங்குவதில் பெருமைகொள்கிறேன்..
*******************************************************

3 கருத்துகள்:

என் பக்கம் சொன்னது…

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

புதுவை ஞானகுமாரன் சொன்னது…

தங்கள் ஆயுத எழுத்து மிக சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது.பல பிரச்சனைகள் குறித்து தெளிவான கருத்துக்களை முன்வைக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.சரத் யாதவ் போன்றவர்கள் எல்லாம் நம்நாட்டின் தலைவர்கள் என்ன செய்ய!

Anbarasi சொன்னது…

who is saroj thozhar.

கருத்துரையிடுக