ஜுன் 21 - உலக தந்தையர் தினம்....
உலகத்திலேயே தலைசிறந்த தந்தை...

உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு மரியாதைக்குரிய(?)
தமிழக முதல்வர் திரு. கருணாநிதி அவர்களை
உலகத்திலேயே
தலைசிறந்த தந்தையாக தேர்ந்தெடுத்து
ஆயுத எழுத்து பெருமையடைகிறது.
மேலும் இவர் தலைசிறந்த குடும்பத்தலைவராகவும் விளங்குகிறார் என்று இந்த விருதளிக்கும் குழு கூறுகிறது.
************************************************************

எங்கே போனது ஜனநாயகம்..?


அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய தேர்தல்
ஆணையத்தின் கெடுபிடி என்பது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் குழிதோண்டி புதைக்கும் வண்ணம் இருந்தது.
#அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. # போஸ்டர் ஒட்டக்கூடாது. # தோரணம்-கொடி கட்டக்கூடாது. # 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. தும்மக்கூடாது.. இரும்மக்கூடாது.. அப்பப்பா ஏகப்பட்ட கெடுபிடிகள் தான். தேர்தல் நடப்பதே வாக்காளர்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொண்டது தேர்தல் ஆணையம். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டது. எங்கே போனது இந்திய ஜனநாயகம்..?
ஆனால் இதே தேர்தல் ஆணையம் இன்னொரு பக்கம் என்ன செய்கிறது என்றால்.. காங்கிரஸ், திமுக., போன்ற முதலாளித்தவ கட்சிகள் தேர்தல் சமயத்தில் மது பாட்டில், பிரியாணி, பணம் போன்றவைகளை வெளிப்படையாகவே மக்களுக்கு வழங்குகின்றன.. அதை தடுக்காத தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது என்ன ஜனநாயகம்.. ?
ஜனநாயகம் எங்கே போனது..
அது மட்டுமல்ல.. பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போன சிவகங்கை சீமான் ப. சிதம்பரம் பின் மறு வாக்கு எண்ணிக்கையில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறதே.. நியாயங்களும் தர்மங்களும் எங்கே போனது இந்த நாட்டில்..?
ஜனநாயகம் தான் எங்கே.. தேடிப்பார்க்கிறேன்.. தென்படவில்லை..
இன்னொருப்பக்கம்.. இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற
திரு.வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் சுமார் இருபத்திரெண்டாயிரம் அதிகம்..
இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது..
இது போன்று தேர்தல் தில்லு முல்லுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை மிக அதிகம்.. எங்கே போனது ஜனநாயகம்..?
சாமானியர்கள் பேசிக்கொண்டது..
சுப்பனும் குப்பனும் செய்தித்தாளை படித்துவிட்டு இப்படி பேசிக்கொண்டார்கள்....
கோடிகணக்கான பணத்தை கொட்டி செலவு செய்பவர்களே தேர்தலில்
வெற்றிபெற முடிகிறதென்றால் எதற்கு இப்படிப்பட்ட தேர்தல் நடத்த வேண்டும்.. கள்ளுக்கடை ஏலம் விடுகிற மாதிரி எல்லா தொகுதிகளையும் ஏலம் விடலாமே.. கோடிகணக்கில் பணம் வைத்திருப்பவர்களே தேர்தலில் வெற்றிபெற முடிகிறது.. சாமானியர்கள் வெற்றிபெற முடிவதில்லை.. தேர்தல் ஜனநாயகமும் செத்துப்போய்விட்டது.. அப்படி இருக்கையில் தேர்தல் எதற்கு..? ஏலம் விட்டாலும் இன்றைக்கு வெற்றிபெற்றவர்கள் தான் கோடிகணக்கில் ஏலம் கேட்கப்போகிறார்கள்.. அரசுக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்.. இது நல்ல ஐடியாவா இல்ல..
இப்படியாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.. சாதாரண மக்களாகிய நாம் நினைத்தால் நம் ஜனநாயகத்தை மீண்டும் உயிர்த்தெழ செய்யலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடைபெற்றேன்..
**************************************************

தேசம் இனி மெல்லச் சாகும்..

விலை போனதோ வாக்குச் சீட்டு....

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வது தான் ஜனநாயக மரபு. இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் கூட்டணி மட்டுமல்ல.. தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவை தன் கைக்குள் அடக்க நினைக்கும் அமெரிக்கா மற்றும் அமெரிக்க உளவுத்துறை, பணபலம், ரௌடி கலாச்சாரம், தில்லுமுல்லு.. இவைகள் தான் காங்கிரஸ்- தி.மு.க. வெற்றிக்கு பின்னால் இருக்கின்றன.. இனி பாராளுமன்றத்தில் திருப்பாச்சி அருவா .. சைக்கிள் செயின் இதெல்லாம் கிடைக்கும்.. வரும் ஐந்தாண்டுகளில் மக்கள் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது.. இடது சாரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட சூழ்நிலையில் இந்த தேசம் மீண்டும் தேசத்துரோகிகளின் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.. தேசம் இனி மெல்லச்சாகும்..

**************************************************************************

உலகமெனும் நாடக மேடையில்....

2009 ஆம் ஆண்டின்
மிக சிறந்த நடிகர்கள் பாரீர்....
**************************************************

பாராளுமன்றத் தேர்தலில் நமது கடமைகள்

வருகிற மே 13 அன்று நடைபெற உள்ள 15 வது பாராளுமன்றத் தேர்தலில் நமக்கான கடமைகள் இரண்டு

முதலாவது கடமை : வாக்களிப்பது....
தேர்தலில் நமக்கான ஜனநாயகக் கடமையை முதலில் ஆற்றிடவேண்டும். வாக்களிப்பது நமது கடமை.. நம் முன்னோர்கள் போராடிபெற்ற உரிமை.. அதுவும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பது நல்லது..
இரண்டாவது கடமை : யாருக்கு வாக்களிப்பது....?
கடந்த பதினாறு ஆண்டு காலமாக இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றன.. நாம் இன்றுவரை எப்படிப்பட்ட இடையூறுகளையும் இன்னல்களையும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.. இதற்கெல்லாம் காரணமானவர்கள் இதையெல்லாம் மறந்து விட்டு நம்மிடம் வாக்கு கேட்டு இதுநாள் வரை வந்தார்கள்.. கோபமடைந்த மக்கள் சில இடங்களில் செருப்பை வீசி தங்கள் கோபத்தை காட்டியதையும் நாம் தொலைகாட்சியில் கண்கூடாக பார்த்தோம்.. மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் , அத்வானி போன்ற பெரிய மனிதர்கள் இதற்கு விதிவிலக்கல்ல....

# நம் நாட்டு மக்களின்- உழைப்பாளி மக்களின் - இளைஞர்களின் -மாணவர்களின் - குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கி நிச்சயமற்றதாக்கிவிட்டு வளர்ச்சி என்று மார் தட்டுகிறார்கள் அவர்கள்..
# தேசத்தையே அடகு வைத்து விட்டு தேர்தலில் கையசைத்து வருகிறார்கள் அந்த பெரிய மனிதர்கள்..
# விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் , விவசாயிகளின் தற்கொலைகளும் மதவெறி பெயாட்டங்களும் கடந்த காலத்தின் வெப்பமாய் சுட்டேரிக்கின்றன..

# கை என்றும் தாமரை என்றும் ஒருவர் மாற்றி ஒருவராக மீண்டும் மீண்டும் அவர்களே ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிப்பதற்கும் பெருமுதலாளிகளுக்கு சலுகை அளிப்பதற்கும் மட்டுமே அரசியல் நடத்துகிறார்கள்.
# அந்த இருவரையுமே மக்கள் நிராகரித்து விட்டு இன்னொரு திசையில் விடியலை நோக்கி நிற்கின்றனர்.. தேசத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது.. மாற்றத்தை நோக்கி மக்கள் திரும்பிவிட்டனர்.. அந்த மாற்றம் தான் மூன்றாவது மாற்று.. இனி இந்த தேசத்தில் மக்களுக்கான அரசு நடைபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழி காட்டுகிற மூன்றாவது மாற்று அணிக்கு வாக்களிக்க வேண்டும்..
-----------------------------------------------------------------------

மே தினம் - உழைப்பாளி மக்களின் உரிமை தினம்இழப்பதற்கு வேறொன்றும் இல்லை ....
அடிமை விலங்கை தவிர....
இழந்த நம் உரிமைகளை மீண்டும் பெற்றிட வரும் பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்தும் மூன்றாவது மாற்று அணியை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம்.... ஏகாதிபத்தியத்தையும் மதவெறி கூட்டத்தையும் விரட்டியடிப்போம்.... அதற்கு இந்த மே தினம் வழிகாட்டட்டும்.... வானில் செங்கொடி உயர்த்துவோம்.... மே தினம் வாழ்க.... புரட்சி வாழ்க....