நெஞ்சு பொறுக்கதில்லையே....!

யாரை நொந்துகொள்வது..
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை
நிறைவேற்றினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்
என்று சொன்னது யார் தெரியுமா..? சாதாரண பாமரன் அல்ல.. ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் தான் இப்படி
திருவாய் மலர்ந்தது.. அதுவும் எங்க பேசியிருக்கார் தெரியுமா..?
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியபோது இவ்வாறு மிரட்டி இருக்காரு..
ஏற்கனவே முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்களும்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. சமூக நீதிக்கு எதிரான இது போன்ற கட்சிகளின் இம்மாதிரியான செயல்பாடுகள் அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது..
யாரை நொந்துகொள்வது..? இவர்களையா..! இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களையா..!
"பாதகம் செய்பவரைக் கண்டால்
நீ பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" - இது பெண்களுக்கு வீரத்தை
ஊட்டுவதற்கு புரட்சிக்கவி பாரதி எழுதிய வீர வரிகள்.. இருந்தாலும் இந்த பாட்டுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.. இந்த பாட்டையும் அவர்களையும்
ஒப்பிட்டுப் பார்த்தால் நான் பொறுப்பில்லை.. ஆமா சொல்லிட்டேன்..
**********************************************************

3 கருத்துகள்:

ramsngopal சொன்னது…

yes, comrade it's true what you have said.

மக்கள்தாசன் சொன்னது…

நமது தேசத்தின் குடியரசு தளைவராகவும், மக்களவையி்ன் தலைவராகவும், மத்திய அமைச்சர்களாகவும், மாநில முதலவாராகவும், மற்றும் பல உயர் பதவிகளி்ல் பெண்கள் இருப்பது நமக்கு பெருமை சேர்க்கிறது. இருப்பினும், பெண்களின் வளர்ச்சி போதாது. அவர்கள் ஆணாதிக்க விலங்கினை உடைத்து வெளியே வர வேண்டும். அதற்க்கு நாம் அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும்.

பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கிட்டில்,சரத்யாதவின் குரலை தொல்.திருமாவளவனும் ஒலிக்கிறார்.33 சதவீதத்தில், தலித் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு உண்டு.அதில், பிற்ப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு கேட்கிறார்கள்.இது நியாயம் தானே, பிற்ப்படுத்தப்பட்ட பெண்களும் அரசியல் அதிகாரம் பெற இது வழி வகுக்காதா ? என பெரும்பான்யோர் கேட்கிறார்கள். பெரும்பாலும் அரசியல் கட்சிகளில் மேல் சாதி பெண்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.இதனையும் தடுத்து நிறுத்தத்தான் வேண்டும், திருத்தங்களுடன், தடைகளையும் தந்திரங்களையும் மீறி, 33 சதவீதம் ஒதுக்கீடு பெண்களுக்கு வர வேண்டும், இது காலத்தின் கட்டாயம்.

Jenni சொன்னது…

இப்படிப்பட்ட தலைவர்களை தேர்ந்தெடுத்த நம்ம மக்களை நினைச்சா தான் நெஞ்சு பொறுக்குதில்லை தோழா

கருத்துரையிடுக