இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1956 ஆம் ஆண்டுக்கு முன் 248 கம்பனிகளாக தனியார்களின் கையில் இருந்த இன்சூரன்ஸ் துறை இந்திய உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியை கொள்ளையடித்த சூழ்நிலையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்கிற தொழிற்சங்கத்தை தோற்றுவித்து தனியார் இன்சூரன்ஸ் கம்பனிகள் செய்து வந்த கொள்ளைகளை எதிர்த்து குரல்கொடுத்து இன்சூரன்ஸ் துறையை தேச உடைமையாக்க வேண்டும் போராடி வெற்றிகண்ட மறைந்த தோழர். சரோஜ் அவர்களின் நினைவை போற்றுவோம்.. இவர்கள் போன்ற தலைவர்களெல்லாம் பல தியாகங்கள் செய்து போராடி உருவாக்கிய பொதுத்துறை எல். ஐ. சி யை - இன்சூரன்ஸ் துறையை அந்நிய சக்திகள் - ஏகாதிபத்திய முதலாளிகள்சூறையாடி கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசானது சட்டபூர்வமாக அனுமதியளிக்க வேகமாக முயற்சி செய்து வருவது கண்டிக்க வேண்டிய செயலாகும். இப்படிப்பட்ட தோழர்கள் தோற்றுவித்த தொழிற்சங்கத்தில் நானுமொரு உறுப்பினராய் இயங்குவதில் பெருமைகொள்கிறேன்.. *******************************************************
சுரண்டலற்ற வர்க்க பேதமற்றதொரு சமூகத்தை
அதாவது சோசலிசத்தை உருவாக்குவது என்ற
நோக்கத்துடன் தங்களது குடும்பம், சமூகம்,
பொருளாதாரம், அரசியல் போன்ற நடவடிக்கைகளை
செயல்படுத்தும் தோழர்களில் நானும் ஒருவன்..
இந்த சுரண்டலற்ற சமூகத்தை அமைப்பதற்கு நீண்ட
காலம் ஆகலாம். ஆனாலும் இறுதியில் வெல்லப்
போவது சோசலிசம் மட்டுமே என்பதில் ஆழமான
நம்பிக்கையுள்ளவன்..