ஐஸ்லாந்திலும் மாற்று சிந்தனை....
சிவந்த மண் ஆனது ஐஸ்லாந்து....

தாகம் தணிக்க இளநீர் பருகுங்கள்


தாகம் தணிக்க உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பன்னாட்டு குளிர்பானங்களை
தவிர்ப்பீர்..

இளநீர் பருகுவதால் தாகம் தணியும்
குளிர்ச்சி தரும் உடல் நலத்திற்கும்
மிக மிக நல்லது..
**************************************************

ஏப்ரல் 21 - மாமேதை லெனின் பிறந்த தினம்


சோஷலிசப்பாதையில் கியுபா - 50


கியுபா என்றொரு பொன்னுலகம் ....
******************************************************************************

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்

''வாசிப்பை நேசிப்போம்"
இன்றைக்கு நம் நாட்டில் மக்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் என்பது குறைந்துகொண்டே போகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் வாசிப்பு பழக்கமே இல்லாமல் போய்விட்டது.அதற்கு இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை, கணினி போன்ற அறிவியல் வளர்ச்சி, தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான காரணங்களாக அறியப்படுகிறது. நாமெல்லாருமே பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா போவதற்கு நிறைய செலவுகள் செய்வோம். திரைப்படங்கள் பார்ப்பதற்கு நிறைய செலவுகள் செய்வோம். பண்டிகைகள் திருவிழாக்கள் என நிறைய செலவுகள் செய்வோம். உணவுசாலைக்கு சென்று நாவிற்கு சுவையான உணவுகளை சாப்பிடுவதற்கு நிறைய செலவு செய்வோம். ஆனால் பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்குவதற்கு தயங்குகிறோம். அதற்காக மேலே சொன்னவைகளெல்லாம் தவறான செயல்பாடுகள் என்று சொல்லவில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான உறவை வளர்ப்பதற்கு, குழந்தைகள் மகிழ்ச்சியாய் பொழுதை கழிப்பதற்கு, எந்திரமயமான வாழ்க்கைக்கு நடுவே ஒரு மாறுதலுக்கு அந்தமாதிரியான செயல்பாடுகள் அவசியம் தான். அதேபோல் புத்தகம் வாங்குவதிலும் புத்தகத்தை வாசிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.நம் குழந்தைகள் மத்தியிலும் வாசிப்பு பழக்கத்தை உண்டுபண்ணவேண்டும்.நல்ல புத்தகங்கள் தான் மிக சிறந்த நண்பர்களாக இருக்கமுடியும். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் இன்றைக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வளர்க்கிறார்கள். அதனால் தான் இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளில் மட்டும் பல ஆண்டுகளாய் ஆண்டுதோறும் மார்ச் 5 அன்று உலக புத்தக நாள் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை பரிசாக அளிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பொதுவாகவே அவர்கள் மற்றவர்களுக்கு பரிசளிப்பதேன்றால் புத்தகங்களை மட்டுமே வழங்குவார்கள். இந்த இரு நாடுகளை தொடர்ந்து தான் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் ஏப்ரல் 23 ஐ உலக புத்தக தினமாக அறிவித்தது. இன்றைக்கு நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இந்த புத்தக தினம் கொண்டாடபடுகிறது.

நாமும் இத்தினத்தில் நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி நம் வீட்டு குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பதன் மூலம் சிறந்த முறையில் கொண்டாடுவோம். புத்தகங்களை மறந்த - வாசிப்பை மறந்த சமூகம் அழிந்து போகுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே நம் சமூகத்தை சிறந்த முறையில் பாதுகாக்க நம் வருங்கால தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்ட வாசிப்பை நேசிப்போம்.. # வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் உருவாக்கி வளர்ப்போம். # கண்டிப்பாக வீட்டுக்குகொரு நூலகம் அமைப்போம். # புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்குவதை வழக்கமாக கொள்வோம்.# புத்தகங்களை எடைக்கு போட்டு காசாக்காமல் பொக்கிஷமாய் பாதுகாப்போம்.

நல்ல புத்தகங்களுக்கு பாரதி புத்தகாலயம் புத்தகங்களையே நாடுங்கள்.

****************************************************************************************************

ஏப்ரல் 22 - பூமி தினம்


பூமி சூடாகிறது.. இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய முக்கியமான கடமையாகும்.. அப்போதுதான் நம் வருங்கால தலைமுறையினர் நிம்மதியாக வாழமுடியும். அதற்கு கொதிக்கும் நம் பூமியை குளிரச்செய்யவேண்டும்.. அதற்காக நாம் செய்யவேண்டியது என்னன்னா.. # நாம் பயன்படுத்தும் வாகனங்களில் பெட்ரோல் - டீசல் உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் அல்லது குறைத்துகொள்ளவாவது வேண்டும். # அதேபோல் வீடுகளில் - அலுவலகங்களில் - வியாபாரதளங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரம் மற்றும் குளிர்சாதன பெட்டிபயன்படுத்தபடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். # வீடுகளிலும், வீட்டைச்சுற்றிலும், சாலையோரங்களிலும் நிறைய மரங்களைஅவசியம் வளர்க்கவேண்டும். குறிப்பாக மாமரம், அரசமரம் நல்லது. ( மாமரம் - கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டையாக்சைடு வாயுக்களை அதிகமாக உறிஞ்சக்கூடிய தன்மைவாய்ந்தது. அரசமரம் - இருபத்திநான்கு மணி நேரமும் ஆக்சிஜன் வாயுவை வெளியிடக்கூடிய தன்மையுடையது )# கூடியமட்டும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். மக்காத இந்த பொருட்களை பூமியில் கண்ட கண்ட இடங்களில் போடுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். # நம் கல்வி முறையை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் மாற்றியமைத்தால் தான் இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்று நம்மால் முடிந்தவைகளை அறிவுபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் செய்வதன் மூலம் சூடேறும் பூமியை குளிரச்செய்வோம்.. நம் வருங்கால தலைமுறையினரையும் பாதுகாப்போம்..

**************************************************

இடது பக்கம் செல்க....

நாம் தினமும் சாலைகளில் விபத்தில்லாமல் சென்று பாதுகாப்பாக வீடு வந்து சேரவேண்டுமென்றால் இடது பக்கமாக தான் சென்று வர வேண்டும். இதை தான் நமக்கு போக்குவரத்து விதிமுறை சொல்கிறது. இந்த விதிமுறைகளை மீறும் போது தான் விபத்துக்கள் நேர்கின்றன.
அதே போல் தான் கடந்த பதினாறு ஆண்டுகளாக இந்த தேசத்தை ஆண்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுகளானது ( நரசிம்மராவ் - ஐந்து ஆண்டுகள் + வாஜ்பேய் - ஆறு ஆண்டுகள் + மன் மோகன் சிங் - ஐந்து ஆண்டுகள் ) விதிமுறையோ வரைமுறையோ இல்லாமல் அமெரிக்காவும் உலக வங்கியும் காட்டுகிற பக்கமெல்லாம் இன்று வரை சென்றுகொண்டிருக்கின்றன. அதன் விளைவாக எத்தனை விதமான விபத்துக்களை இந்த நாடு சந்தித்திருக்கின்றது. யோசித்து பாருங்கள்.
# மோசமான பொருளாதார வீழ்ச்சி # விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு
# உணவு தட்டுபாடு # விவசாயம் பாதிப்பு # ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் தற்கொலை # ஒரு நாள் வருமானமே ரூபாய் இருபதுக்கும் குறைவாக வாங்குபவர்கள் எழுபத்தெட்டு கோடிக்கும் மேல் # ரேஷன் முறை சீர்குலைவு # மக்களின் வாங்கும் சக்தி குறைவு # சாதாரண மக்களுக்கு எட்டாகனியாக கல்வி # படித்த பல லட்சம் இளைஞர்களுக்கு கிட்டாத வேலைவாய்ப்பு # வேலையிலிருந்த பல லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பு # பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைப்பு # சாதாரண மக்களுக்கு கிட்டாத மருத்துவம் - சுகாதாரம் # பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் # சாதாரண மக்களின் மீது வரி திணிப்பு # அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் காட்டப்படும் எஜமான விசுவாசம் # இவைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இப்படியே பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இவைகளெல்லாம் எதனால் நடக்கின்றன. ஏதோ நம் தலையெழுத்துபடி நடக்கிறதென்று விதியின் மீது பழி சுமத்தி நாம் சும்மா இருந்து விடலாமா அல்லது நம் நாட்டு மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே போவதால் தான் நாம் இப்படி கஷ்டபடுகிறோம் என்று சாக்கு போக்கு சொல்லி கண்டுகொள்ளாமல் இருக்கலாமா.. இதற்கெல்லாம் யார் காரணமென்று யோசிக்கவேண்டாமா..? நாம் யோசிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது..! கடந்த பதினாறு ஆண்டுகளாக நம்மை ஆண்ட இந்த காங்கிரஸ் மற்றும் பி.ஜெ.பி. தலைமையிலான அரசுகள் தான் நாட்டின் இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம் என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொள்ளவேண்டாமா..? வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த இரு கட்சிகளில் ஒன்றை மீண்டும் தேர்தெடுத்தால் இந்த நாடு என்னவாகும் என்பதை நாம் யோசிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது..

மீண்டும் இவர்களே ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு ஒரு சுடுகாடாக மாறிவிடும்.. இன்னும் பல பெரிய பெரிய வீழ்ச்சிகளையும் பாதிப்புகளையும் நாம் சந்திக்கவேண்டிவரும்..
இந்த பேராபத்திலிருந்து நாம் தப்பிக்கவேண்டுமென்றால்.. இந்த நாட்டு மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டுமென்றால் நாம் கண்டிப்பாக இடது பக்கமாக தான் செல்லவேண்டும்..இடதுசாரிகள் பக்கமாக தான் செல்லவேண்டும்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் காட்டுகின்ற திசைவழியில் சென்றால் தான் மேற்கூறிய பாதிப்புக்கள் மேலும் தொடராமல் இந்த தேசத்து அப்பாவி மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.
"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுஉடைமை "
*****************************************************************************************

இது நல்லதல்ல....

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
அருமை தோழர் நன்மாறன் அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என்பது மிகவும் கண்டிக்க தக்கது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அமைதியான முறையில் தேர்தலை சந்திக்க திராணி இல்லாதவர்கள், வன்முறை தாக்குதல்கள் மூலம் குழப்பங்களை செய்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று திராவிட முன்னேற்றக்கழக தலைமை கனவு காண்கிறது. இதை மதுரை மக்கள்- தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது. இவர்களை தூக்கி எறியவேண்டும்.
கன்று குட்டியை கொன்ற குற்றத்துக்காக தன் மகன் மீது தேர் சக்கரத்தை ஏற்றி கொன்ற மன்னன் ஆண்ட மண் இது.. மன்னன் தவறான தீர்ப்பு வழங்கியதற்காக மதுரையையே எரித்த பெண் வாழ்ந்த மண் இது..
தவறு செய்யும் மகனை தக்க சமயத்தில் தண்டிக்காத தந்தையும், தவறு செய்யும் ஆட்சியாளர்களை தக்க சமயத்தில் தண்டிக்காத மக்களும் எதிர்காலத்தில் அல்லல்பட வேண்டிவரும் என்பதை மறந்துவிட கூடாது..
இது நல்லதல்ல..
*****************************************************************************

சமர்ப்பணம்

ஆயுத
எழுத்து என்ற இந்த வலைப்பூ
இந்த தேசத்தை அடிமையாக்கி ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்திற்கு
எதிராக தன் எழுத்துக்களை ஆயுதமாக தூக்கிய புரட்சிக்கவிஞன் பாரதிக்கு
சமர்ப்பணம்
**************************************************

மூன்றாவது மாற்று....

இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும்
வழிகாட்டக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டும் திசை வழியில் நாமும் செல்வோம். தேசத்தை மக்களை காப்போம். மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகள் வழிகாட்டும்

மூன்றாவது மாற்று அணிக்கு

வாக்களித்து வெற்றி பெற செய்வோம். தேசத்தை காப்போம். தேசம் என்பது வெறும் மண்ணல்ல.. உயிர் மூச்சு..

**************************************************

அறிமுகம்


அன்பு வணக்கங்கள்.. வலை பூவின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
ஆயுத எழுத்து.... பயந்துவிட வேண்டாம். இது வன்முறையை தூண்டி உயிரை கொல்லும் ஆயுதமல்ல.. வரைமுறையில்லா ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் எழுத்து தான் இந்த ஆயுத எழுத்து.. இந்த தேசத்து அப்பாவி மக்களின் -
அறியாசனங்களின் அறியாமையை போக்கும் எழுத்து தான் இந்த ஆயுதஎழுத்து. ஏகாதிபத்தியத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக பாதிக்கப்பட்டவர்கள் எறிந்த செருப்பும் ஆயுதம் தான். அவர்கள் கோபமும் நியாயம் தான்..
அப்பாவி ஏழை மக்களின் மீது அக்கறை காட்டாது பெரு முதலாளிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மட்டுமே எஜமான விசுவாசம் காட்டும் இந்திய ஆட்சியாளர்களை கண்டு எனக்கும் அதிக கோபம் தான்..
இந்த தேசத்திற்கு எதிராக- நம் மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களை கண்டு மிக அதிக கோபம் தான்..
மதத்தின் பெயரால் விஷத்தை தூவி இந்த தேசத்தை துண்டாட நினைக்கும் மதவெறி கூட்டத்தை கண்டு எனக்கும் மிகப்பெரிய கோபம் தான்..
ஆனால் இவர்களுக்கு எதிராக நான் என் செருப்பை தூக்க மாட்டேன்..
அவர்கள் மீது தூக்கி எரிந்து என் செருப்பை அசிங்க படுத்த மாட்டேன்..

என் எழுத்துகள் தான் ஆயுதமாய் அவர்கள் மீது பாயும்.. இந்த ஆயுதம் மேலும் கூர்மை பெற செழுமை பெற ஆதரவும் ஆலோசனையையும் வழங்குங்கள்
என அன்புடன் கேட்டுகொள்கிறேன்..
தோழமையுடன்,
புதுவை ராம்ஜி
புதுச்சேரி