தேவை சாதாரண மக்களுக்கான பட்ஜெட்

சாதாரண மக்களுக்கான - தொழிலாளருக்கான பட்ஜெட் தேவை - சி. . டி. யு கோரிக்கை

மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான
அரசு வரும் ஜூலை மாதம் தனது முதல் பட்ஜெட்டினை அளிக்க இருக்கிறது.
இது சம்பந்தமாக பட்ஜெட் எப்படி அமைய வேண்டும் என்பதை நமது மத்திய
நிதியமைச்சர் இந்திய நாட்டின் பெருமுதலாளிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார். நம் நாட்டின் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பங்கு
அம்பானிகள் உட்பட 48 கோடீஸ்வரர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால்
80 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களின் தினசரி வருமானம் வெறும்
20 ரூபாய்க்கு குறைவானது. இவர்களை பற்றிய அக்கறை இந்த அரசுகளுக்கு
எப்போதுமே இருந்ததில்லை. அந்த 48 கோடீஸ்வரர்களுக்கு பல வரிச்சலுகைகளை அறிவித்து அவர்கள் மேலும் மேலும் சொத்துக்களை
குவிப்பதற்கான பட்ஜெட்டாகத்தான் இருக்குமே தவிர சாதாரண மக்களுக்கு
பயனளிக்கும் பட்ஜெட்டாக இருக்காது. மாறாக சாதாரண மக்களை தொழிலாளர்களை பாதிக்கிற பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.
இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு தலைவர் எம்.கே.பாந்தே
மற்றும் பொதுச்செயலாளர் முகமது அமீன் ஆகியோர் மத்திய நிதியமைச்சர்
பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். இது வழக்கமா நடக்கிற ஒன்னு தான். வருடா வருடம் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு பட்ஜெட் முன்மொழிவை நிதியமைச்சரிடம் கொடுப்பார்கள். மத்திய தொழிற்சங்கமும்
கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பார்கள். இதையெல்லாம்
மத்திய நிதியமைச்சர் சம்பிரதாயத்திற்கு வாங்கி வைத்துக்கொள்வார். ஆனால்
அவர் செய்வதை தான் செய்வார்.
சி. ஐ. டி. யு. கேட்டிருக்கும் கோரிக்கைகளில் சில..

#
அரசின் வருமானத்தில் 25 சதவீதத்தை கல்வி, சுகாதாரம், குடியிருப்பு போன்ற சமூகத்துறைகளுக்குஒதுக்கவேண்டும்.
# பொது விநியோக முறையை - ரேஷன் முறையை வலுப்படுத்தவேண்டும்.
# ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டத்திற்கு ரூ. 12000 கோடி ஒதுக்கீடு
செய்யவேண்டும்.
# விவசாய உற்பத்தியை அதிகரிக்க பொது முதலீட்டை உயர்த்த வேண்டும்.
# வேளாண் விளைபொருட்களுக்கு நியாய விலையை உறுதி செய்யவேண்டும்.
# முறைசாரா தொழிலாளர் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
# அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில்
ஏராளமானோர் வேலை இழந்திருப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் நடைமுறையில் உள்ள
வேலை நியமன தடைச்சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
# அப்படி வேலையிழந்த 15 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.
# உழைப்பாளி மக்களின் சேமிப்பு நிதியான பி.எப். மற்றும் பென்ஷன் நிதிகளை
தனியார்க்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடவேண்டும்.
# வருமான வரி உச்சவரம்பை ரூ. 2 லட்சமாக உயர்த்தவேண்டும்.
# லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை
செய்யக்கூடாது.
# வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் பொதுத்துறையை வலுப்படுத்த வேண்டும்.
# பெரிய மனிதர்கள் வங்கிகளில் வாங்கியிருக்கும் வராக் கடனை வசூல் செய்யவேண்டும்.

இப்படி மக்கள் நலன் சார்ந்த ஏராளமான ஏராளமான் கோரிக்கைகளை
அரசின் முன் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த பிரணாப் முக்கர்ஜிக்கு தான்
வெளிச்சம். பெருமுதலாளிகளும் அமெரிக்க எசமானரும் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செய்வாரு.
தயவு செய்தித்தாள்களில் வரும் பட்ஜெட் செய்திகளை முழுமையாய் படியுங்கள். மேற்கண்ட கோரிக்கைகளை நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டிருகிறாரா என்பதை கண்காணியுங்க. இரண்டையும் ஒப்பிட்டு பாருங்க.. அப்போது தான் அரசு செய்கிற தவறுகள் என்ன என்பது தெரியும்.
இந்த அரசின் லட்சணம் புரியும்.
***********************************************************

6 கருத்துகள்:

பாரதி செல்லம்மா சொன்னது…

Hmmmmmmmmmmmmmm..........................
Ippadipatta jananayaga budget eppo varum?
Athu naam vanthaal than .
Athu eppo?

புதுவை இராம்ஜி சொன்னது…

அந்த பொன்னுலகம் காண த்தான் காரல் மார்க்சு தந்த அறிவியலை
படிக்கிறோம்.. மற்றவர்களுக்கு கற்றும் தருகிறோம்.. நம்பிக்கை
வைப்போம்.. போராடுவோம்.. சோசலிசம் நிச்சயம் மலரும்.. புதுவை ராம்ஜி

Unknown சொன்னது…

நாட்டிலுள்ள சொத்துக்களில் நான்கில் ஒரு பங்கு 48 கோடீஸ்வரர்களின் கைகளில் என்பதோடு, நடப்பு மக்களவை உறுப்பினர்களில் 55 சதவீதம் கோடீஸ்வரர்களே என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களில் கோடீஸ்வரர்கள் எவருமில்லை என்பது வேறு விஷயம். கோடீஸ்வரன் என்றாலே அயோக்கியன் என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. ஆனால், ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூட செலவழிக்க முடியாத 77 கோடி மக்கள் வசிக்கும் இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோடிஸ்வரர்களாக இருக்கும் பட்சத்தில், ஏழை எளிய மக்களின் வாழ்நிலை குறித்து இந்த மக்களவை எத்தகைய அணுகுமுறையினை மேற்கொள்ளும் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது . இதன் பிரதிபலிப்பு பட்ஜெட்டில் இல்லாமல் இருக்குமா?

இத்தோடு எழும் மற்றொரு கேள்வி பணபலம். தேர்தல்களில் பணம் விளையாடுவது இந்நாட்டில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், அதன் சக்தி இன்றைய மக்களவைத் தேர்தலில் அளவுமீறி வெளிப்பட்டிருக்கிறது. எனவே அரசியல் பிரச்சினைகளோடு, தேர்தல் முறை குறித்த அடிப்படை ஜனநாயகப் பிரச்சினைகளுக்காகப் போராடும் தேவையும் இன்று எழுந்துள்ளது.

இ எம் ஜோசப்

emperorchristy சொன்னது…

Mumbai is home to 20 billionaires of the world. Owing to the homes of Mukesh Ambani and Anil Ambani, Mumbai has become unique city of the list having richest billionaires of the world.

Mumbai’s 20 billionaires are having average net worth of 7.6 billion US dollars, whereas Moscow, the top ranker in the list, has average net worth of 5.9 billion US dollars.

கருத்துரையிடுக