இடது பக்கம் செல்க....

நாம் தினமும் சாலைகளில் விபத்தில்லாமல் சென்று பாதுகாப்பாக வீடு வந்து சேரவேண்டுமென்றால் இடது பக்கமாக தான் சென்று வர வேண்டும். இதை தான் நமக்கு போக்குவரத்து விதிமுறை சொல்கிறது. இந்த விதிமுறைகளை மீறும் போது தான் விபத்துக்கள் நேர்கின்றன.
அதே போல் தான் கடந்த பதினாறு ஆண்டுகளாக இந்த தேசத்தை ஆண்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுகளானது ( நரசிம்மராவ் - ஐந்து ஆண்டுகள் + வாஜ்பேய் - ஆறு ஆண்டுகள் + மன் மோகன் சிங் - ஐந்து ஆண்டுகள் ) விதிமுறையோ வரைமுறையோ இல்லாமல் அமெரிக்காவும் உலக வங்கியும் காட்டுகிற பக்கமெல்லாம் இன்று வரை சென்றுகொண்டிருக்கின்றன. அதன் விளைவாக எத்தனை விதமான விபத்துக்களை இந்த நாடு சந்தித்திருக்கின்றது. யோசித்து பாருங்கள்.
# மோசமான பொருளாதார வீழ்ச்சி # விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு
# உணவு தட்டுபாடு # விவசாயம் பாதிப்பு # ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் தற்கொலை # ஒரு நாள் வருமானமே ரூபாய் இருபதுக்கும் குறைவாக வாங்குபவர்கள் எழுபத்தெட்டு கோடிக்கும் மேல் # ரேஷன் முறை சீர்குலைவு # மக்களின் வாங்கும் சக்தி குறைவு # சாதாரண மக்களுக்கு எட்டாகனியாக கல்வி # படித்த பல லட்சம் இளைஞர்களுக்கு கிட்டாத வேலைவாய்ப்பு # வேலையிலிருந்த பல லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பு # பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைப்பு # சாதாரண மக்களுக்கு கிட்டாத மருத்துவம் - சுகாதாரம் # பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் # சாதாரண மக்களின் மீது வரி திணிப்பு # அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் காட்டப்படும் எஜமான விசுவாசம் # இவைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இப்படியே பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இவைகளெல்லாம் எதனால் நடக்கின்றன. ஏதோ நம் தலையெழுத்துபடி நடக்கிறதென்று விதியின் மீது பழி சுமத்தி நாம் சும்மா இருந்து விடலாமா அல்லது நம் நாட்டு மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே போவதால் தான் நாம் இப்படி கஷ்டபடுகிறோம் என்று சாக்கு போக்கு சொல்லி கண்டுகொள்ளாமல் இருக்கலாமா.. இதற்கெல்லாம் யார் காரணமென்று யோசிக்கவேண்டாமா..? நாம் யோசிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது..! கடந்த பதினாறு ஆண்டுகளாக நம்மை ஆண்ட இந்த காங்கிரஸ் மற்றும் பி.ஜெ.பி. தலைமையிலான அரசுகள் தான் நாட்டின் இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம் என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொள்ளவேண்டாமா..? வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த இரு கட்சிகளில் ஒன்றை மீண்டும் தேர்தெடுத்தால் இந்த நாடு என்னவாகும் என்பதை நாம் யோசிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது..

மீண்டும் இவர்களே ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு ஒரு சுடுகாடாக மாறிவிடும்.. இன்னும் பல பெரிய பெரிய வீழ்ச்சிகளையும் பாதிப்புகளையும் நாம் சந்திக்கவேண்டிவரும்..
இந்த பேராபத்திலிருந்து நாம் தப்பிக்கவேண்டுமென்றால்.. இந்த நாட்டு மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டுமென்றால் நாம் கண்டிப்பாக இடது பக்கமாக தான் செல்லவேண்டும்..இடதுசாரிகள் பக்கமாக தான் செல்லவேண்டும்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் காட்டுகின்ற திசைவழியில் சென்றால் தான் மேற்கூறிய பாதிப்புக்கள் மேலும் தொடராமல் இந்த தேசத்து அப்பாவி மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.
"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுஉடைமை "
*****************************************************************************************

1 கருத்துகள்:

புதுவை ஞானகுமாரன் சொன்னது…

idathupakkam..moondravadhu maatru.../.allavaendukolgal magizhcchi

கருத்துரையிடுக