எங்கே போனது ஜனநாயகம்..?


அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய தேர்தல்
ஆணையத்தின் கெடுபிடி என்பது ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் குழிதோண்டி புதைக்கும் வண்ணம் இருந்தது.
#அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. # போஸ்டர் ஒட்டக்கூடாது. # தோரணம்-கொடி கட்டக்கூடாது. # 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது. தும்மக்கூடாது.. இரும்மக்கூடாது.. அப்பப்பா ஏகப்பட்ட கெடுபிடிகள் தான். தேர்தல் நடப்பதே வாக்காளர்களுக்கு தெரியாத வண்ணம் பார்த்துக்கொண்டது தேர்தல் ஆணையம். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டது. எங்கே போனது இந்திய ஜனநாயகம்..?
ஆனால் இதே தேர்தல் ஆணையம் இன்னொரு பக்கம் என்ன செய்கிறது என்றால்.. காங்கிரஸ், திமுக., போன்ற முதலாளித்தவ கட்சிகள் தேர்தல் சமயத்தில் மது பாட்டில், பிரியாணி, பணம் போன்றவைகளை வெளிப்படையாகவே மக்களுக்கு வழங்குகின்றன.. அதை தடுக்காத தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இது என்ன ஜனநாயகம்.. ?
ஜனநாயகம் எங்கே போனது..
அது மட்டுமல்ல.. பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போன சிவகங்கை சீமான் ப. சிதம்பரம் பின் மறு வாக்கு எண்ணிக்கையில் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறதே.. நியாயங்களும் தர்மங்களும் எங்கே போனது இந்த நாட்டில்..?
ஜனநாயகம் தான் எங்கே.. தேடிப்பார்க்கிறேன்.. தென்படவில்லை..
இன்னொருப்பக்கம்.. இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற
திரு.வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் சுமார் இருபத்திரெண்டாயிரம் அதிகம்..
இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது..
இது போன்று தேர்தல் தில்லு முல்லுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை மிக அதிகம்.. எங்கே போனது ஜனநாயகம்..?
சாமானியர்கள் பேசிக்கொண்டது..
சுப்பனும் குப்பனும் செய்தித்தாளை படித்துவிட்டு இப்படி பேசிக்கொண்டார்கள்....
கோடிகணக்கான பணத்தை கொட்டி செலவு செய்பவர்களே தேர்தலில்
வெற்றிபெற முடிகிறதென்றால் எதற்கு இப்படிப்பட்ட தேர்தல் நடத்த வேண்டும்.. கள்ளுக்கடை ஏலம் விடுகிற மாதிரி எல்லா தொகுதிகளையும் ஏலம் விடலாமே.. கோடிகணக்கில் பணம் வைத்திருப்பவர்களே தேர்தலில் வெற்றிபெற முடிகிறது.. சாமானியர்கள் வெற்றிபெற முடிவதில்லை.. தேர்தல் ஜனநாயகமும் செத்துப்போய்விட்டது.. அப்படி இருக்கையில் தேர்தல் எதற்கு..? ஏலம் விட்டாலும் இன்றைக்கு வெற்றிபெற்றவர்கள் தான் கோடிகணக்கில் ஏலம் கேட்கப்போகிறார்கள்.. அரசுக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்.. இது நல்ல ஐடியாவா இல்ல..
இப்படியாக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.. சாதாரண மக்களாகிய நாம் நினைத்தால் நம் ஜனநாயகத்தை மீண்டும் உயிர்த்தெழ செய்யலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடைபெற்றேன்..
**************************************************

1 கருத்துகள்:

emperorchristy சொன்னது…

உலை கூடத்தான் அமைத்து தருவது வாள் ஆயின் அந்த வாள் அவன் தலை கொய்திடும் வலிவுபெறுகிறதல்லவா. மனிதன் குளம் வெட்டுகிறான். இடறி விழுந்ததால் உயிரையே குடிக்கிறதல்லவா! தேன் பருகுகின்றோம் சில துளி உடலில் இருப்பின் எறும்பு மொய்த்து கடிக்கிறதல்லவா? அது போலவே தனிமனிதனின் ஓட்டுரிமையால் அமைக்கப்படும் அரசும், பயனுணர்ந்து செயலாற்றும் திறமையற்றவர்களிடம் சிக்கிவிட்டால், உயிர்க்காக்கவேண்டிய அரசு உயிர் கொல்லும் அரசாக நாட்டையே நடுங்கச் செய்கிறது.
(அகமும் புறமும் - 14.01.1966)

கருத்துரையிடுக