ஆயுத எழுத்து
போராளிகளின் கைகளில் எழுத்தும் ஓர் ஆயுதமே
>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<< ********************************************************************************

நிறம் மாறிப்போன சுதந்திரம்.. கை மாறியும் போச்சி..

அந்நியர் ஆட்சி நீங்கி தேசம் சுதந்திரம் பெற்று
முதல் சுதந்திர தினம் இது.. மக்களோடு மக்களாக
பாரத பிரதமர்.. தேச வளர்ச்சிக்கான திட்டங்களை
அறிவிக்கிறார் தேச சுதந்திரத்திற்காக போராடிய பிரதமர்..

ஆனால் மக்களைவிட்டு விலகி கூண்டுக்குள்
நிற்கும் இன்றைய பிரதமர்.. இந்திய - அமெரிக்க
பெருமுதலாளிகள் புடை சூழ அவர்களின்
வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்கிறார்..
தேசத்தின் சொத்துக்களான பொதுத்துறைகளை
விற்பதற்கு ஏலம் விடுகிறார்..

இதில் வேடிக்கை என்னவென்றால் இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள்
அதாவது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். ஆனால் முன்னவர் தேசத்தை இந்திய மக்களுக்கு பெற்றுத் தந்தார்.. இன்றையவர் தேசத்தை அமெரிக்காவிற்கு
விற்று வருகிறார்..
இதில் என்ன வேதனை என்றால் .. ஜாலியன் வாலா பாக்கில் தேச விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த விடுதலை போராட்ட போராளிகளைத் தந்தது பஞ்சாப் மண் தான்..
அந்த படுகொலைக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மாபாதகர்களை வீழ்த்திய மாவீரன் உத்தம் சிங்கை தந்ததும் பஞ்சாப் மண் தான்..
சுதந்திர எழுச்சியை இளைஞர்களுக்கு ஊட்டி விடுதலை தீயை மூட்டிய புரட்சியாளன் பகத் சிங்கை தந்ததும் பஞ்சாப் மண் தான்..
இந்திய விடுதலை போராட்டத்தில் சிறுவனாக இருந்தபோதே தீரமுடன் பங்கேற்று பின் சுதந்திர இந்தியாவில் சமூக விடுதலைக்காக இறுதிமூச்சி வரை போராடிய தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை தந்ததும் பஞ்சாப் மண் தான்..
அதே பஞ்சாப் மண் தான்.. இன்று தேச துரோகம் செய்கிற.. மக்கள் விரோதமாக செயல்படுகிற மன் மோகன் சிங்கையும் தந்திருக்கிறது என்பது தான்
வேதனைக்குரியதாக இருக்கிறது..
----------------------------------------------------------------------------------

நமது செல்வம் கொள்ளைபோக ஒரு சட்டம்..!



எல். . சி யை தனியார்க்கு விற்க மன் மோகன் அரசு சூழ்ச்சி..
தொடரும்..

தோழர் சுர்ஜித் நினைவை போற்றுவோம்


இந்திய அரசியல் வானில் ஒளி தரும் கதிரவனாய்
உழைப்பாளி மக்களின் உன்னத தோழனாய்
இறுதி நாள் வரை இந்த தேசத்தின் நினைவாய்
இதே நாளில் (ஆகஸ்ட் 1- ல் ) நம்மை விட்டு பிரிந்த
இந்திய நாட்டின் மாபெரும் தலைவன்
மரியாதைக்குரிய தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்
நினைவை போற்றுவோம்.