முதலாவது கடமை : வாக்களிப்பது....
தேர்தலில் நமக்கான ஜனநாயகக் கடமையை முதலில் ஆற்றிடவேண்டும். வாக்களிப்பது நமது கடமை.. நம் முன்னோர்கள் போராடிபெற்ற உரிமை.. அதுவும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பது நல்லது..
இரண்டாவது கடமை : யாருக்கு வாக்களிப்பது....?
கடந்த பதினாறு ஆண்டு காலமாக இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றன.. நாம் இன்றுவரை எப்படிப்பட்ட இடையூறுகளையும் இன்னல்களையும் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.. இதற்கெல்லாம் காரணமானவர்கள் இதையெல்லாம் மறந்து விட்டு நம்மிடம் வாக்கு கேட்டு இதுநாள் வரை வந்தார்கள்.. கோபமடைந்த மக்கள் சில இடங்களில் செருப்பை வீசி தங்கள் கோபத்தை காட்டியதையும் நாம் தொலைகாட்சியில் கண்கூடாக பார்த்தோம்.. மன்மோகன் சிங் , ப.சிதம்பரம் , அத்வானி போன்ற பெரிய மனிதர்கள் இதற்கு விதிவிலக்கல்ல....
# நம் நாட்டு மக்களின்- உழைப்பாளி மக்களின் - இளைஞர்களின் -மாணவர்களின் - குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்கி நிச்சயமற்றதாக்கிவிட்டு வளர்ச்சி என்று மார் தட்டுகிறார்கள் அவர்கள்..
# தேசத்தையே அடகு வைத்து விட்டு தேர்தலில் கையசைத்து வருகிறார்கள் அந்த பெரிய மனிதர்கள்..
# விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் , விவசாயிகளின் தற்கொலைகளும் மதவெறி பெயாட்டங்களும் கடந்த காலத்தின் வெப்பமாய் சுட்டேரிக்கின்றன..
# கை என்றும் தாமரை என்றும் ஒருவர் மாற்றி ஒருவராக மீண்டும் மீண்டும் அவர்களே ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிப்பதற்கும் பெருமுதலாளிகளுக்கு சலுகை அளிப்பதற்கும் மட்டுமே அரசியல் நடத்துகிறார்கள்.
# அந்த இருவரையுமே மக்கள் நிராகரித்து விட்டு இன்னொரு திசையில் விடியலை நோக்கி நிற்கின்றனர்.. தேசத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது.. மாற்றத்தை நோக்கி மக்கள் திரும்பிவிட்டனர்.. அந்த மாற்றம் தான் மூன்றாவது மாற்று.. இனி இந்த தேசத்தில் மக்களுக்கான அரசு நடைபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழி காட்டுகிற மூன்றாவது மாற்று அணிக்கு வாக்களிக்க வேண்டும்..
-----------------------------------------------------------------------
1 கருத்துகள்:
super thozhar....
கருத்துரையிடுக