ஜூலை 30 தியாகிகள் தினம்..


வீரவணக்கம்..

உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக போராடி
உயிர்த்தியாகம் செய்த ஜூலை 30 தியாகிகளின்
நினைவை போற்றுவோம்..

மத்திய அரசின் 100 நாள் சாதனை பாரீர்


வாக்களித்த மக்களுக்கு முதல் பரிசு....
நூறு ரூபாய் வாங்கி ஓட்டு போட்ட மக்களுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி மு க கூட்டணி அரசு காட்டுகிற நன்றியை தான் பாத்தீங்களா.. பதவி ஏற்று நூறு நாளுல நெறைய சாதனை பண்ண போறதா சொன்னாரே மன்மோகன் சிங்கு அது இது தான் போலிருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு ஐயா.. இன்னும் என்னென்ன திட்டமெல்லாம் வெச்சிருக்கீங்களோ.. ஒண்ணு ஒண்ணா எடுத்து விடுங்க..
இதுல என்ன ஒரு விசேஷம்னா ஜூலை 2 ஆம் தேதி தான் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்க போவுது. ஜூலை 6 ஆம் தேதி தான் பட்ஜெட்டே தாக்கல் செய்யப்போறாங்க.. அதுவரைக்குமே பொறுத்திருக்க முடியாத மத்திய அரசு ஒன்னாந்தேதியே மக்களை ஒரு தாக்கு தாக்கிட்டாங்க.
இனி இடது சாரிகள் தொல்லை இல்லை என்று மண்ணு மோகன் சொன்ன போதே இனிமேல் இந்த அரசு தான்தோன்றி தனமாக தறுதலையாக தறிகெட்டு ஓடும் என்று எதிர்பார்த்தோம். அது ஆரம்பமாகிவிட்டதை தான் இந்த விலை உயர்வு காட்டுகிறது.
வழக்கம் போல் பொதுமக்கள் மௌனமா இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிகள் மட்டும் வழக்கம் போல் இந்த விலை உயர்வை எதிர்த்து போராடிகிட்டு இருக்காங்க. இதுவே பாராளுமன்றத்தில் சென்ற முறை போல் இடது சாரிகள் அதிக எண்ணிக்கையில் இருந்திருந்தால் இது போன்று பெட்ரோல் - டீசல் விலையை ஏறவிட்டிருப்பார்களா..? நிழலின் அருமை வெய்யிலில் தானே தெரியும்..
******************************************************************